மின்கம்பி அறுந்து விழுந்து மாடு சாவு

Update: 2023-06-12 19:30 GMT

கிருஷ்ணகிரி:-

கிருஷ்ணகிரி அருகே பெரியமுத்தூர் ஊராட்சி சின்னஅக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). விவசாயியான இவர் 4 மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் இவரது வீட்டின் பின்புறம் செல்ல கூடிய மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் கம்பம் அருகில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகள் மீது மின்கம்பி விழுந்தது. இதில் ஒரு பசுமாடு சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி இறந்தது.

இதை கவனித்த வெங்கடேசன், மற்றொரு மாட்டின் மீது விழுந்த மின் கம்பியை குச்சியை வைத்து அகற்றினார். இதனால் அந்த மாடு உயிர் பிழைத்தது. இது குறித்து வெங்கடேசன் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று மீட்பு பணிகளை கவனித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்