நகைக்கடையில் ½ பவுன் மோதிரத்தை திருடி சென்ற தம்பதி

நகைக்கடையில் ½ பவுன் மோதிரத்தை திருடி சென்ற தம்பதியை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-06-11 18:30 GMT

பெரம்பலூர் கடைவீதி அருகே பூசாரி தெருவில் உள்ள நகைக்கடையில் சம்பவத்தன்று ஒரு தம்பதி நகை வாங்குவது போல் வந்தனர். பின்னர் அவர்கள் கடையின் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி ½ பவுன் மோதிரத்தை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் ராஜேந்திரகுமார் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மோதிரத்தை திருடி சென்ற தம்பதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்