கெங்கவல்லி அருகே சாராய வியாபாரி வீட்டில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்

கெங்கவல்லி அருகே சாராய வியாபாரி வீட்டில் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-03 21:58 GMT

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லி முத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் பந்தல் என்கிற இடத்தில் மணி என்பவரின் வீட்டில் சாராயம் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்ற போது, மணி தப்பி ஓடிவிட்டார். உடனடியாக அவருடைய வீட்டை போலீசார் சோதனை நடத்திய போது அங்கு நாட்டுத்துப்பாக்கி இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மணியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்