கருட சேவை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்
நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்
திருவெண்காடு:
நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் 11 பெருமாள்களும் எழுந்தருளி, கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கருட சேவை உற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நாராயண பெருமாள் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் தலைமை தாங்கினார்.கோவில் ஆய்வாளர் மதியழகன் வரவேற்றார். கருட சேவை உற்சவம் சிறப்பாக நடைபெறுவதற்கு விழா கமிட்டியினர் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.