உழவன் நண்பர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

உழவன் நண்பர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-03-27 18:58 GMT

ஆவூர்:

விராலிமலை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட உழவன் நண்பர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், விராலிமலை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குனருமான ஆனந்தசெல்வி தலைமை தாங்கி, சிறுதானியங்களின் சாகுபடி முக்கியத்துவம் மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றியும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும் உழவன் நண்பர்கள் அனைவரும் விவசாயிகளுக்கும், விரிவாக்க அலுவலர்களுக்கும் இடையே முக்கிய இணைப்பாக செயலாற்றி விவசாயிகளை ஒருங்கிணைத்து வேளாண்மை, உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளை சார்ந்த திட்டங்களை செயல்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் இளங்குமரன் முன்னிலை வகித்து பேசுகையில், நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விராலிமலை, குன்னத்தூர், கசவனூர், மீனவேலி, பொய்யாமணி, தேராவூர், ஆவூர், நீர்பழனி, பாலாண்டம்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளில், திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட ஒத்துழைக்க வேண்டும், என்றார். துணை வேளாண்மை அலுவலர் தங்கராஜ் நெல்லுக்குப்பின் பயறு சாகுபடி தொழில்நுட்பத்தையும், வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள இடுபொருட்கள் விவரங்களையும் எடுத்துக் கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் லெட்சுமிபிரபா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்