மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம்மேயர் மகேஷ் தலைமையில் நடந்தது
மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம்மேயர் மகேஷ் தலைமையில் நடந்தது
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடனான கலந்தாய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மேயர் அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நாகர்கோவில் நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும், குடிநீர் திட்டப்பணிகளையும் விரைவுபடுத்தி முடித்து, சாலைகளை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, சாலையோர பூங்காக்கள் அமைக்கும் பணிகளை விரைவு படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.