கீழக்கரை நகராட்சியில் கலந்தாய்வு கூட்டம்

வரி வசூல் குறித்து கீழக்கரை நகராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-26 18:30 GMT

கீழக்கரை, 

கீழக்கரை நகராட்சியில் கமிஷனர் செல்வராஜ் மற்றும் நகர்மன்ற தலைவர் சஹானா ஆபிதா தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி பகுதிகளில் போதிய அளவு வீட்டுவரி, குடிநீர், வணிக வளாகம் போன்ற பல்வேறு வரி வசூல்கள் நிலுவையில் உள்ளதால் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளன.இதனை கருத்தில் கொண்டு கீழக்கரையில் உள்ள அனைத்து வார்டுகளுக்குட்பட்ட கவுன்சிலர்கள் தனது வார்டு மக்களிடம் நகராட்சி வரி வசூல் செய்யும் உதவியாளர்களுடன் வரி வசூல் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தி தர வேண்டும் என்று நகராட்சி கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இக்கூட்டத்தில் இளநிலை உதவியாளர் உதயகுமார் வரவேற்றார். பொறியாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, மற்றும் இளநிலை உதவியாளர்கள் தமிழ்ச்செல்வன், சரவணகுமார், மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்