போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி

போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2022-08-20 19:05 GMT

திருச்சி மாநகர போலீசார் சார்பில் கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் ஜங்ஷன் ரவுண்டானா பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை கொண்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் சார்பில் கருமண்டபம் பகுதியில் ஒரு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் கருமண்டபம் பொதுமக்களும் கலந்து கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதில் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்