மாணவர்களின் வாசிப்பு திறனை சோதனை செய்த கலெக்டர்

வடுகந்தாங்கல் பள்ளியில் கலெக்டர்குமாரவேல் பாண்டியன், மாணவர்களின் வாசிப்புத்திறனை சோதனை செய்தார்.

Update: 2022-09-22 16:47 GMT

வடுகந்தாங்கல் பள்ளியில் கலெக்டர்குமாரவேல் பாண்டியன், மாணவர்களின் வாசிப்புத்திறனை சோதனை செய்தார்.

வாசிப்பு திறன்

கே.வி.குப்பம் பகுதியில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது வடுகந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற கலெக்டர் 7-ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகுப்பறைக்குள் சென்று மாணவரிடையே எழுத்துக்களை அடையாளம் கண்டு எழுத்துக் கூட்டிப் படிக்கும் வாசித்தல் திறன் உள்ளதா? என்பதை அறிய கரும்பலகையில் இலத்தேரி என்று அவர் சாக்பீஸ் மூலம் எழுதினார். பின்னர் . அதை மாணவர்களை படிக்குமாறு கூறினார். அப்போது மாணவர்கள் அதை படிக்க முடியாமல் திணறினர்.

பின்னர் 10-ம் வகுப்பு மாணவர்களிடம் சென்று பொது அறிவு கேள்விகளை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து சத்துணவு கூடத்தில் சமைக்கப்பட்ட உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் கழிவறைகள் உள்ளதா?, அவை சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பதை நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆய்வு செய்தார்

பி.என்.பாளையம் குக்கலபள்ளி புதூர் ரோடு, ஈஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான குளம் மாநில நிதிக்குழு மானியம் ரூ.15 லட்சத்து 90 ஆயிரம் செலவில் சீரமைக்கப்பட்டதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமிபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தாசில்தார் அ.கீதா, துணை தாசில்தார் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் த.கல்பனா, குடியாத்தம் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிசாமி, பள்ளித் தலைமை ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்