திருவண்ணாமலை அருகே 10-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி

திருவண்ணாமலை அருகே குளிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2022-11-27 16:14 GMT

திருவண்ணாமலை அருகே குளிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

நண்பர்களுடன்...

திருவண்ணாமலை அருகே உள்ள காவேரியாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் அன்புமூர்த்தி. இவரது மகன் அமுதவருஷன் (வயது 14). இவன், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நண்பர்களுடன் சமுத்திரம் ஏரி அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான். அப்போது அவன் எதிர்பாராதவிதமாக கிணற்றின் நீரில் மூழ்கி சேற்றில் சிக்கினான்.

நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிணமாக மீட்பு

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். சிறிது நேர தேடுதலுக்கு பிறகு அமுதவருஷனை பிணமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்