சாலையில் விழுந்த குழந்தை பஸ்சில் சிக்கி பலி

மோட்டார்சைக்கிள்கள் விபத்தில் சாலையில் விழுந்த குழந்தை பஸ்சில் சிக்கி இறந்தது.

Update: 2022-08-22 13:45 GMT

தூசி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வடக்குபட்டறை பங்காரு நகரை சேர்ந்தவர் குணசீலன் (வயது 27). பொக்லைன் மெக்கானிக். இவரது மனைவி மோனிஷா, மகள் மயூரி (1½).

இந்த நிலையில் நேற்று காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் கிராமத்துக்கு மோட்டார்சைக்கிளில் குணசீலன், மோனிஷா, மயூரி, குணசீலனின் சகோதரி நீலாவதி ஆகிய 4 பேர் சென்றனர்.

தூசி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலைதடுமாறி 4 பேரும் சாலையில் கீழே விழுந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் சிக்கிய குழந்தை மயூரி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது. குணசீலன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அங்கு உள்ளவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்