பெட்டிக்கடையில் மதுவிற்றவர் மீது வழக்கு
பெட்டிக்கடையில் மதுவிற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரிமளம் ஒன்றியம் வம்பரம்பட்டி பகுதியில் மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, கே.புதுப்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வம்பரம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பவர் தனது பெட்டிக்கடையில் மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.