பஸ் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு
திருச்சி செல்லும் பஸ் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கையை அடுத்த நாலுகோட்டையை சேர்ந்தவர் சரவணன்(வயது 27). சம்பவத்தன்று இவர் கமுதியில் இருந்துதிருச்சி செல்லும் பஸ்சில் சிவகங்கை பஸ் நிலையத்தில் ஏறினார். அவர் பஸ்சில் ஆபாசமான வார்த்தைகளை பேசினாராம். இதனால் பஸ் கண்டக்டர் பெரிய மருது(34) அவரை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், கண்டக்டர் பெரிய மருதுவை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
அத்துடன் சோழபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி கல்லை எடுத்து பஸ்சின் பின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.