ஊராட்சி தலைவரை தகாத வார்த்தையில் பேசியவர் மீது வழக்கு

ஊராட்சி தலைவரை தகாத வார்த்தையில் பேசியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-17 17:00 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் அல்தாப் உசேன். இவருடைய மனைவி ஜொகராபானு (வயது 36). இவர் கடந்த 15-ந் தேதி கொண்டம்பட்டியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தருமன் என்பவர் ஊராட்சி தலைவரை தகாத வார்த்தைகளில் பேசினார். இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஜொகராபானு கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், தருமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்