தீக்குளிக்க முயன்ற விவசாயி குடும்பத்தினர் மீது வழக்கு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி குடும்பத்தினர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2023-07-04 19:10 GMT

சூலக்கரை

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரிய வாடி ஊரைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 52) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து தனது விவசாய நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றார். இது பற்றி கூரைக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி விவேக் கொடுத்த புகாரின் பேரில், சூலக்கரை போலீசார் மாரிமுத்து, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்