ரூ.4¼ லட்சம் வசூலித்து ஏமாற்றிய ஊழியர் மீது வழக்கு
ரூ.4¼ லட்சம் வசூலித்து ஏமாற்றிய ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ஜீயபுரம் கரியக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 32). இவர் திருச்சி ஜே.கே.நகரில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் முகவராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் பல்வேறு நிறுவனங்களில் வசூல் செய்த ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 890-ஐ அலுவலகத்தில் செலுத்தாமல் சிவபிரகாசம் கையாடல் செய்தது அலுவலக தணிக்கையில் தெரியவந்தது. இதுகுறித்து நிறுவன மேலாளர் இந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் சிவபிரகாசம் மீது ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.