கிணத்துக்கடவில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் மீது வழக்கு
கிணத்துக்கடவில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் மீது வழக்கு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து கிணத்துக்கடவு போலீசார் கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் சோதனையிட்டபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. இதனையடுத்து போலீசார் பெட்டிக்கடை நடத்தி வந்த சிவகங்கை மாவட்டம் சூரக்கோட்டை புதுவயல் பகுதியைச் சேர்ந்த வீரபத்ரன் (வயது 28) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், 20 குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.