பெண்ணை தாக்கிய மின்வாரிய ஊழியர் மீது வழக்குப்பதிவு
சிவகாசியில் பெண்ணை தாக்கிய மின்வாரிய ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசி அருகே திருத்தங்கல் கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜான் பீட்டர். இவரது வீட்டுக்கு திருத்தங்கல் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து ராஜபாண்டியன் என்பவர் மின்கட்டணம் கணக்கிட சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் ஜான் பீட்டர் மனைவி பிரியா (வயது 36) இருந்துள்ளார்.
மின் மீட்டர் பொருத்தி இருக்கும் இடம் உயரமாக இருப்பதாக கூறி ராஜபாண்டியன் நாற்காலி கேட்டுள்ளார். அதற்கு பிரியா தனது வீட்டில் நாற்காலி இல்லை என்றும், தனது சகோதரி வீட்டில் இருக்கிறதா? என பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இதுெதாடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர் ராஜபாண்டியன், பிரியாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.