பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது வழக்குப்பதிவு
சென்னையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
வந்தே பாரத் ரெயில்சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். அப்போது பிரதமர் மோடி வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நிர்வாகிகள் செல்வப்பெருந்தகை, திரவியம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், சென்னை காவல் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.