சிறுமியை காதல் திருமணம் செய்த சிறுவன் மீது வழக்குப்பதிவு

சிறுமியை காதல் திருமணம் செய்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-08-20 19:14 GMT

சிவகாசி, 

சிவகாசி பகுதிைய சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் சிவகாசியில் உள்ள ஒரு கோவில் முன்பு திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரி ராஜேஸ்வரி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்