போக்குவரத்து விதிகளை மீறிய 479 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு
போக்குவரத்து விதிகளை மீறிய 479 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி ஆலோசனையின்படி கூடுதல் போக்குவரத்து துணை கமிஷனர் திருமலை குமார் மேற்பார்வையில் போக்குவரத்து உதவி கமிஷனர்கள் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் நகர் முழுவதும் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகவும், அதிகமான நபர்களை ஏற்றிக் கொண்டும், வாகனங்களில் கொடிகளை கட்டிக் கொண்டும், நம்பர் பிளேட் இல்லாமல் சென்ற 479 இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய 50-க்கும் மேற்பட்ட வானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.