மது குடிக்க இடம் அளித்த 2 பேர் மீது வழக்குப்பதிவு

மணல்மேடு அருகே மது குடிக்க இடம் அளித்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2023-04-24 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேடு போலீஸ் நிலைய சரகத்தில் டாஸ்மாக் கடை பகுதி மற்றும் ஒருசில இடங்களில் அமர்ந்து மது அருந்துவதற்கு இடம் அளித்து வருபவர்கள் மீது மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் பாலம், சோழபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் மது அருந்துபவர்களுக்கு இடம் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்