புதுப்பெண் மீது வழக்குப்பதிவு

மெல்ல கொல்லும் விஷத்தை கொடுத்ததாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-14 20:38 GMT

திங்கள்சந்தை:

மெல்ல கொல்லும் விஷத்தை கொடுத்ததாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி

இரணியல் அருகே உள்ள ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் முருகன் (வயது33) கட்டுமான தொழிலாளி. இவருக்கும் இறச்சகுளம் பகுதியை சேர்ந்த சுஜா (24) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவன்-மனைவி ஆகியோர் வயிற்று வலிக்காக தக்கலையில் உள்ள ஒரு மருந்து கடையில் இருந்து மருந்து வாங்கி வந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்துள்ளனர். இந்தநிலையில் இறச்சகுளத்தில் உள்ள சுஜாவின் வீட்டுக்கு புதுமண தம்பதி சென்றனர். அங்கு வடிவேல் முருகனுக்கும், சுஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுஜா, உன்னோடு வாழ பிடிக்கவில்லை, நீ குடித்த மருந்தில் மெல்ல கொல்லும் விஷம் கலந்து கொடுத்தேன் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் முருகன், உறவினர் ஒருவர் உதவியுடன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து வடிவேல் முருகன் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சுஜா மீது இ.பி.கோ. 328 பிரிவின்கீழ் (ஒரு குற்றச்செயல் செய்வதற்காக ஒருவரை மயக்க நிலைக்கு கொண்டு செல்வது) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்