விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
விவசாயியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீரன்குளம் ஊரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). விவசாயி. இவரது தம்பி ஜெபராஜ் மகன் சாமுவேல் (வயது 32). இவர்கள் 2 பேருக்கும் இடையே வயலில் பொது கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவதில் பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இதுகுறித்து செல்வராஜ், சாமுவேல் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செல்வராஜை சாமுவேல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த செல்வராஜ், நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பெருமாள் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை தேடி வருகிறார்.