சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது வழக்கு
திருமண ஆசைகாட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விளாம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 25). கூலித்தொழிலாளி. இவர், 14 வயது சிறுமியிடம் திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில், அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு ஒருவர் போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் கவுன்சிலிங் அதிகாரி சியாமளா விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கருப்பையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.