விபத்தை ஏற்படுத்திய பெண் மீது வழக்கு
விபத்தை ஏற்படுத்திய பெண் மீது வழக்கு
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் ஓடக்கல்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி(வயது 53). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி காளியம்மாள். கணவன்-மனைவி 2 பேரும், சம்பவத்தன்று மோட்டர் சைக்கிளில் காமநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். வி.மேட்டூர் எம்.ஜி.ஆர். நகர் பிரிவு அருகே அந்த வழியாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சூலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் விசாரித்தனர். அப்போது காரை ஓட்டி வந்த ரம்யா என்பவர் தம்பதியின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதனால் தம்பதி கேட்டுக்கொண்டதின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால் கூறியபடி ரம்யா அவர்களது மருத்துவ செலவை ஏற்கவில்லை. இதனால் தம்பதி அளித்த புகாரின்பேரில் சுல்தான்பேட்டை போலீசார் ரம்யா மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.