பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
கடன் பிரச்சினையில் பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
விழுப்புரம்
விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியை சேர்ந்தவர் வேலழகன்(வயது 52). இவருடைய மகன் கிரீஸ் என்பவரும், காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் கண்ணனிடம் கிரீஸ், ரூ.50 ஆயிரத்தை கடனாக வாங்கியிருந்தார். இதனை கண்ணன் திருப்பி கேட்கும்போது அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன், கிரீசின் தாய் லட்சுமியை(50) திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வேலழகன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.