பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
பாப்பாக்குடி அருகே பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே உள்ள பருத்திவாய்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரமாச்சி (வயது 50). இவருடைய கணவர் சந்தனம் என்பவர் அருகில் அர்ஜுனன் (36) என்பவர் தனது மோட்டார்சைக்கிளால் பயமுறுத்தும் விதமாக ஒட்டியுள்ளார். இதற்காக பிரமாச்சி, அர்ஜுனனை கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பிரமாச்சியை அடித்துள்ளார். இதுகுறித்து பிரமாச்சி பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அர்ஜுனன் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.