வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-12 19:26 GMT

திருச்சி பாலக்கரை முதலியார்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் எடிசன்(வயது 24). இவர் சம்பவத்தன்று தனது நண்பரின் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சிக்காக திருச்சி சங்கிலியாண்டபுரத்திற்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்(24) என்பவர் அங்கு வந்து எடிசனிடம் ரூ.200 கேட்டுள்ளார். அப்போது எடிசன், தன்னிடம் பணம் இல்லையென்று கூறியுள்ளார். இதனால் எடிசனிடம் தகராறு செய்த சந்தோஷ், அவரை தகாத வார்த்தையால் திட்டி, கல்லால் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்