துப்புரவு பணியாளரை தரக்குறைவாக பேசிய ஊராட்சி தலைவர் மீது வழக்கு

துப்புரவு பணியாளரை தரக்குறைவாக பேசிய ஊராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-07-08 18:51 GMT

அறந்தாங்கி அருகே காராவயலை சேர்ந்தவர் அலமேலு (வயது 50). இவர் நாகுடி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 5-ந் தேதி நாகுடி ஊராட்சி தலைவர் சக்திவேலிடம் கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று தெரிவித்து உள்ளார். அதற்கு ஊராட்சி தலைவர் சக்திவேல், அலமேலுவை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அலமேலு கொடுத்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்