வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்திய கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்திய கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-17 19:30 GMT

திருச்சி பொன்மலை அருகே உள்ள ராஜப்பா நகர் முரளி நிவாஸ் முதல் கிராஸ் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 32). இவருக்கும் முரளிதரன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தனலட்சுமி ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்தின்போது தனலட்சுமி குடும்பத்தினர் வரதட்சணையாக 40 பவுன் தங்க நகைகள், நவரத்தின மோதிரம், 5 கிலோ வெள்ளி பொருட்களை கொடுத்தனர்.

இந்த நிலையில் தனலட்சுமி பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், எனது கணவர் முரளிதரன் பிரவுசிங் சென்டர் அமைக்க வேண்டும் என்று கூறி வரதட்சணையாக மேலும் ரூ.10 லட்சம் தருமாறு மனதளவிலும், உடல் அளவிலும் துன்புறுத்தினார். இதற்கு உடந்தையாக மாமியார் கிருபா லட்சுமி, மாமனார் குணசேகரன் இருந்துள்ளனர். மேலும் முரளிதரனின் நண்பர்களான நவநீதன், சாந்தகுமார், ராம்குமார், உமாபதி ஆகியோரும் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டினர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்