பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

ராமநாதபுரத்தில் பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-08-07 17:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ளது பழங்கோட்டை. இந்த ஊரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரின் புகைப்படத்திற்கு ராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராமத்தை சேர்ந்த முகம்மது ஜய்சுதீன் மகன் சகுபர்சாதிக் (28) என்பவர் இன்ஸ்டாகிராமில் தவறாக கருத்துகளை போட்டாராம். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது தாயுடன் சகுபர்சாதிக் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இதுகுறித்து சகுபர்சாதிக்கிடம் கேட்டபோது அவர் அவதூறாக பேசி கையால் தாக்கியதோடு செல்போனால் தாக்கியதில் அந்த பெண் படுகாயமடைந்துள்ளார். மேலும், சகுபர்சாதிக்கின் மனைவியும் அவதூறாக பேசி கீழே தள்ளிவிட்டாராம். இதில் காயமடைந்த பெண் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தம்பதி மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்