தோசைக்கல்லால் வாலிபரை தாக்கிய மைத்துனர் மீது வழக்கு

தோசைக்கல்லால் வாலிபரை தாக்கிய மைத்துனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-05-20 20:58 GMT

திருச்சி வரகனேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 38). இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இவர் மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு காந்திமார்க்கெட் பெரியார் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இந்தநிலையில் அங்கு வந்த அவருடைய மகளுக்கு ராஜலிங்கம் பணம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கிருந்த அவருடைய மைத்துனர் கருணாகரன் (33) ராஜலிங்கத்தை தடுத்ததுடன், அங்கிருந்த ேதாசைக்கல்லை எடுத்து அவருடைய தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்