மாற்றுத்திறனாளியை தாக்கிய தொழிலாளி மீது வழக்கு
தேனி அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லை நகரை சேர்ந்த கருப்பையா மகன் பெரியகருப்பன் (வயது 30). இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவரிடம் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான பரமேஸ்வரன் (30) அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு, பெரியகருப்பனிடம் பரமேஸ்வரன் தகராறு செய்தார். அப்போது அவர் அரிவாளால் தாக்கியதில் பெரியகருப்பனுக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவருடைய தந்தை கருப்பையா பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பரமேஸ்வரன் மீது போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.