இறைச்சி கடைக்காரரை தாக்கிய 8 பேர் மீது வழக்கு

முன்விரோதம் காரணமாக இறைச்சி கடைக்காரரை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-04 18:45 GMT

திருவட்டார்:

முன்விரோதம் காரணமாக இறைச்சி கடைக்காரரை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவட்டாரை அடுத்த திருவரம்பு தட்டான்விளாகத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன். இவருடைய மகன் அனீஷ் (வயது 27). இவர் கேசவபுரத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கும், கேசவபுரம் ஷாஜின் (33) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று அனீஷ் கடையில் கோழி வெட்டி கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஷாஜின் மற்றும் 7 பேர் சேர்ந்து அத்துமீறி கடைக்குள் புகுந்து அனீசை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர் ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்