டயர் வெடித்ததில் சரக்கு வாகனம் கவிழ்ந்து வியாபாரி பலி

ஆர்.எஸ்.மங்கலம் அருகே டயர் வெடித்ததில் சரக்கு வாகனம் கவிழ்ந்து வியாபாரி பலியானார்.

Update: 2023-03-11 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கல்லூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் தேவகோட்டை பகுதியில் பூண்டு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் தேவகோட்டையில் இருந்து நேற்று காலை ஆர்.எஸ்.மங்கலம் வாரச்சந்தைக்கு பூண்டு வியாபாரம் செய்வதற்காக சரக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இவர் சரக்கு வாகனத்தில் பின்புறத்தில் அமர்ந்திருந்தார். சரக்கு வாகனத்தில் முன்புறம் 3 பேர் உட்கார்ந்திருந்தனர்.

ஆப்பிராய் பெட்ரோல் பங்க் அருகே சரக்கு வாகனம் வந்த போது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். சரக்கு வாகனத்தில் இருந்த மற்ற 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) நவநீதகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்