தண்டவாளத்தில் சிக்கி நின்ற சரக்கு லாரி

கோவை -மேட்டுப்பாளையம் ரெயில் வந்த போது தண்டவாளத் தில் சிக்கி சரக்கு லாரி நின்றது. அப்போது வந்த ரெயில் 100 மீட்டருக்கு முன்பு நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

Update: 2022-11-10 18:45 GMT

துடியலூர்

கோவை -மேட்டுப்பாளையம் ரெயில் வந்த போது தண்டவாளத் தில் சிக்கி சரக்கு லாரி நின்றது. அப்போது வந்த ரெயில் 100 மீட்டருக்கு முன்பு நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

தண்டவாளத்தை மாற்றும் பணி

கோவை -மேட்டுப்பாளையம் இடையே ெரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த 2 மாதங்களாக தண்டவாளங்களை புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் துடிய லூர் ரெயில்வே கேட் பகுதியில் ஏற்கனவே இருந்ததை விட 1 அடி வரை உயரம் அதிகமாக தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது.

தார்ச்சாலையின் உயரத்தை விட ஒரு அடி உயரமாக தண்டவாளம் உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் துடியலூர் ரெயில்வே கேட் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ெரயிலுக்காக ரயில்வே கேட் மூடப்பட இருந்தது. அந்த நேரத்தில் 30 டன் எடை உள்ள சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது.

லாரி சிக்கி நின்றது

அந்த லாரி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது திடீரென்று சிக்கி நின்றது. லாரி டிரைவர் முயன்றும் முடியாததால் தண்டவா ளத்தின் நடுவே லாரி அப்படியே நின்று விட்டது.

இதற்கிடையே அந்த தண்டவாளத்தில் கோவை மேட்டுப்பாளையம் பயணிகள் ரெயில் வந்து கொண்டு இருந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அங்கிருந்த கேட் கீப்பர் விரைந்து செயல்பட்டு சிவப்பு விளக்கை காண்பித்தார். இதனால் வேகமாக வந்த ரெயில் டிரைவர் சுதாரித்துக் கொண்டு ரெயிலை மெதுவாக இயக்கி தண்டவாளத்தின் நடுவே நின்ற லாரிக்கு 100 மீட்டர் முன்பாக ெரயிலை நிறுத்தினார். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

ஒரு மணிநேர போராட்டம்

இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தண்டவாளத்தின் நடுவே நின்ற லாரியை தள்ளி நகர்த்த முயன்ற னர். லாரியில் 30 டன் சரக்கு இருந்ததால் 1 மணி நேரம் போராடியும் லாரியை நகர்த்த முடிய வில்லை.

எனவே லாரியின் பின் பக்கத்தில் இருந்து மற்றொரு டெம்போ வேன் மூலம் அழுத்திதள்ளி தண்டவாளத்தின் நடுவே நின்ற லாரியை பொதுமக்கள் நகர்த்தினர்.

இதையடுத்து ெரயில்வே கேட் மூடப்பட்டது. அங்கு காத்திருந்த பயணிகள் ெரயில் 1 மணி நேர தாமதமாக கோவை நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் ரெயிலில் காத்திருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

விபத்து தடுப்பு நடவடிக்கை

துடியலூர் ரெயில்வே கேட் பகுதியில் தார்ச்சாலையை விட தண்டவாளத்தின் உயரம் அதிகமாக இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி சிக்கி நிற்கும் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் 3 லாரிகள் தண்டவாளத்தில் நடுவே சிக்கி பழுதாகி நின்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே தண்ட வாளத்தின் உயரத்திற்கு ஏற்ப சாலையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். மேலும் அங்கு விபத்து ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்