தாறுமாறாக ஓடிய கார், வாகனங்கள் மீது மோதல்

Update: 2022-08-21 18:27 GMT

தக்கலை, 

தக்கலை அருகே உள்ள பெருமாள்கோவில், திட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது46), லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று மாலையில் மேட்டுக்கடையில் இருந்து வாழவிளைக்கு ஆட்டோவை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அவருடன் வாழவிளையை சேர்ந்த மணி (70), திண்டுக்கல்லை சேர்ந்த மாயி (42) ஆகியோர் இருந்தனர். ஆட்டோ தக்கலை பஸ்நிலையம் அருகே வந்த போது பின்னால் வேகமாக வந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் நடந்துவந்து கொண்டிருந்த ராமன்பறம்பை சேர்ந்த கணேசன் (63) என்பர் மீது லோடு ஆட்டோ மோதியது. பின்னர் அதே வேகத்தில் வலதுபுறமாக ஓடி எதிரே வந்த மினி டெம்போ மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் லோடு ஆட்டோ ஓட்டி வந்த நாகராஜன், அவருடன் இருந்த மணி, மாயி, சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த கணேசன் ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே, தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும், காரை ஓட்டி வந்த நாகர்கோவில் ஐசக் தெருவை சேர்ந்த அஸ்வந் பெஞ்சமின் (32) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்