சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வேலூர் காகிதப்பட்டறையில் சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்- ஆற்காடு சாலையோரம் காகிதப்பட்டறையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் நிலையம் (மெக்கானிக் ஷெட்) உள்ளது. இங்கு கொண்டு வரப்படும் பழுதடைந்த கார்கள் நிலையத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) செல்வமூர்த்தி தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்த தீயை அணைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.