தர்மபுரி அருகே நிறுத்தி இருந்த கார் தீப்பற்றி எரிந்தது
தர்மபுரி அருகே நிறுத்தி இருந்த கார் தீப்பற்றி எரிந்தது.
தர்மபுரி அருகே உள்ள செட்டிகரை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு சொந்தமான காரை உறவினர்கள் சிலர் அருகே உள்ள ஒரு மைதானத்திற்கு எடுத்துச்சென்று காரை ஓட்டுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டனர். பின்னர் அவா்கள் காரை நிறுத்தி விட்டு அங்கு நின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக காரில் தீப்பிடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காரில் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.