சாலையில் தலைகீழாக கவிழ்ந்த காரால் பரபரப்பு

சாலையில் தலைகீழாக கவிழ்ந்த காரால் பரபரப்பு

Update: 2023-02-22 18:45 GMT

ஊட்டி

ஊட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் மாலையில் உறவினர் வீடுகளுக்கு திருமண பத்திரிகை கொடுப்பதற்காக அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. உடனே காருக்குள் இருந்தவர்கள் பீதி அடைந்து கூச்சல் போட்டனர். இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டனர். கார் தலைகீழாக கவிழ்ந்தாலும், அதில் இருந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து புதுமந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மீட்பு வாகனம் மூலம் கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்