வந்தவாசியில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து

Update: 2023-02-08 16:07 GMT

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் நாகராஜூலு. இவர், தனது குடும்பத்தை சேர்ந்த 8 பேருடன் காரில் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றுவிட்டு, காஞ்சீபுரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். காரை நாகராஜூலு ஓட்டினார்.

வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பணிமனை அருகே காரில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலைேயாரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது கார் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 2 பெண்கள் மட்டும் லேசான காயத்துடன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்