சங்கராபுரம் பகுதியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் - உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்
சங்கராபுரம் பகுதியில் நடந்த மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாமில் உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூட்டை ஊராட்சியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். இதில் மொத்தம் 214 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் பழங்குடியினர் நலத் திட்ட அலுவலர் கதிர்சங்கர், ஒன்றிய குழு தலைவர் திலகவதி நாகராஜன், மாவட்ட ஆவின் சேர்மன் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வகணேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, சங்கராபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மூரார்பாளையம், கீழப்பட்டு, மேலப்பட்டு, வடசெட்டியந்தல், மஞ்சபுத்தூர், வடசிறுவள்ளூர், பழையனூர், விரியூர், ஆரூர், மூக்கனூர், சோழம்பட்டு, நெடுமானூர், சேஷசமுத்திரம், பொய்க்குணம், செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு, செம்பராம்பட்டு, எஸ்.வி.பாளையம, தியாகராஜபுரம், ஊராங்காணி, புத்திராம்பட்டு ஆகிய ஊர்களில் நடந்த முகாமில் மொத்தம் 3,750 மனுக்கள் பெறப்பட்டது.
இதே போன்று சங்கராபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாமில் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில் 660 மனுக்கள் பெறப்பட்டது. இதில் செயல் அலுவலர் சம்பத்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணிதாகப்பிள்ளை, துணை தலைவர் ஆஷாபிஜாகிர்உசேன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.