மனவளக்கலை மன்றம் சார்பில் உலக அமைதிக்கான வேள்வி
மனவளக்கலை மன்றம் சார்பில் உலக அமைதிக்கான வேள்வி நடைபெற்றது.
உலக மக்கள் அனைவரும் அமைதியாக வாழ வழி செய்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி கடந்த 1958-ம் ஆண்டு உலக சேவா சமுதாய சங்கத்தை உருவாக்கிய வேதாத்திரி மகரிஷி பிறந்த தினத்தை மனவளக்கலை மன்றத்தினர் உலக அமைதி தினமாக கடைபிடித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு பெரம்பலூர் மனவளக்கலை மன்றம் சார்பில் அறிவு திருக்கோவிலில் உலக அமைதிக்கான வேள்வி நடந்தது. நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் சாந்தகுமார் வரவேற்றார். உலகம் அமைதி பெற வேண்டி பேராசிரியர் பத்மாவதி தவவேள்வி நடத்தினார். பேராசிரியர் சுந்தர், ஞான ஆசிரியரின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார். இதில் துணை தலைவர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.