கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.
ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலத்தை சேர்ந்த பெரியநாயகி என்பவரது கன்றுக்குட்டி எதிர்பாராதவிதமாக அங்கிருந்து 40 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை பத்திரமாக மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.