நாகர்கோவிலில் ரெயில் என்ஜின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட ஓட்டல் தொழிலாளி;ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்

நாகர்கோவிலில் ரெயில் என்ஜின் முன் பாய்ந்து ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்.

Update: 2022-07-04 18:42 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ரெயில் என்ஜின் முன் பாய்ந்து ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஓட்டல் தொழிலாளி

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 37). இவர் தக்கலையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டலில் வேலை செய்த போது, சுடலைமுத்து திடீரென தன்னுடைய கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. பின்னர் போலீசார் சுடலைமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்த சுடலைமுத்து நேற்று காலை டிஸ்சார்ஜ் ஆனார். தொடர்ந்து மதியம் நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சுடலைமுத்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கோட்டார் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டு பகுதிக்கு செல்வதற்காக ரெயில் என்ஜின் ஒன்று அந்த வழியாக வந்தது.

தற்கொலை

அந்த சமயத்தில் சுடலைமுத்து திடீரென ரெயில் என்ஜின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா்கள் ஜோசப், குமார்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் என்ஜின் முன் பாய்ந்து ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்