30 பயணிகளுடன் பள்ளத்தில் இறங்கிய பஸ்
கல்வராயன்மலையில் 30 பயணிகளுடன் பள்ளத்தில் பஸ் இறங்கியது.
கச்சிராயப்பாளையம்:
கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் வழியாக மலை கிராமமான சேராப்பட்டு கிளாக்காடு கிராமத்திற்கு இன்று காலை 11 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். மான்கொம்பு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், சாலையோர பள்ளத்தில் இறங்கியது. உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர், பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் அதில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக இறங்கினர். இது குறித்த பயணிகள் கூறுகையில், கல்வராயன்மலைக்கு சரியான சாலை வசதி இல்லை. சாலை குறுகிப்போய் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்றனர்.