குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய பஸ்
குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியது.
லால்குடி ரவுண்டானா பகுதியில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்ல புதிய குழாய் அமைக்கும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த பணிகள் நேற்று இரவு முடிவடைந்த நிலையில் குடிநீர் குழாய்க்காக பறித்த குழியை முறையாக மண் நிரப்பாமல் அரைகுறையாக மூடி உள்ளனர். இதனிடையே நேற்று காலையில் திருச்சியில் இருந்து லால்குடி, அரியலூர் வழியாக ஜெயங்கொண்டத்துக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. லால்குடி ரவுண்டானா பகுதியில் வந்தபோது, குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பஸ் சிக்கி கொண்டது. அதன்பின் பஸ் நகரமுடியாமல் அங்கேயே நின்றது. அதன் பின் பயணிகள் இறக்கி விடப்பட்டு ராட்சத கிரேன் மூலம் பஸ் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.