குண்டும்-குழியுமான சாலை

கூத்தாநல்லூர் அருகே குண்டும்-குழியுமான அதங்குடி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-11 17:56 GMT

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி மரக்கடையிலிருந்து அதங்குடி செல்ல தார்ச்சாலை வசதி உள்ளது. இந்த சாலை வழியாக லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர், மன்னார்குடி போன்ற நகர பகுதிகளுக்கும், வாழச்சேரி, மரக்கடை, பொதக்குடி, விழல்கோட்டகம், வெள்ளக்குடி, சித்தாம்பூர், கோரையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கும் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தினமும் சென்று வருகின்றனர். மேலும், கார், வேன், ஆட்டோ, டிராக்டர், லாரி, பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த வழியாக தினமும் சென்று வருகின்றன.

சீரமைக்கப்படுமா?

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதுடன் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், இந்த சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், மழை பெய்யும்போது பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பலர் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே, குண்டும்-குழியுமான அதங்குடி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்