முறிந்த வாழை மரத்தில் முளைத்த மொட்டு
முறிந்த வாழை மரத்தில் மொட்டு முளைத்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பரம்பூர் கிராமத்தில் உள்ள விவசாயியான காமாட்சி மாரியம்மாள் என்பவரது வீட்டு தோட்டத்தில் வாழை மரங்கள் உள்ளன. இதில் ஒரு வாழைமரமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது துண்டாக முறிந்து விழுந்தது. இதையடுத்து அந்த வாழைமரம் முறிந்த பகுதியில் இருந்து வெட்டி அகற்றப்பட்டு இருந்த நிலையில், திடீரென வாழை குலை தள்ளுவதற்கான மொட்டு வளர்ந்துள்ளது. இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.